என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தரம் உயர்வு"
- தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
- 30 ஆண்டுகளுக்குப்பின்னர் தற்போது காளை மாட்டுச்சந்தை விரைவில் செயல்பட உள்ளது.
காங்கயம் :
திருப்பூர் மாவட்டம் காங்கயம் நகர்மன்ற சாதாரணக்கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் எஸ்.வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நகர்மன்றத்தலைவர் சூரியபிரகாஷ் பேசுகையில் "காங்கயம் நகராட்சி முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். காங்கயம் நகரில் 30 ஆண்டுகளுக்குப்பின்னர் தற்போது காளை மாட்டுச்சந்தை விரைவில் செயல்பட உள்ளது. இதற்காக காங்கயம் அருகே தனியார் நிலத்தை குத்தகைக்கு எடுத்து நகராட்சி சார்பில் மாட்டு சந்தை செயல்படுத்தப்படும்.
காங்கயம் நகராட்சியில் 2022-2023 ஆண்டுக்குரிய சொத்துவரி, காலியிட வரி, தொழில் வரி ஆகிய அனைத்து வரியினங்களும் 100 சதவீதம் வசூல் செய்து, தமிழ்நாட்டில் முதல் நிலை நகராட்சியாக காங்கயம் நகராட்சி சாதனை படைத்துள்ளது.வரி வசூல் செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய நகராட்சி ஊழியர்கள் மற்றும் காங்கயம் நகரப்பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்" என்றார்.கூட்டத்தில் குடிநீர்குழாய் பழுது நீக்குதல், சிறு பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட 73 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. இதில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலக ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- பள்ளிகள் அனைத்தையும், மேல்நிலை பள்ளிகளாக மாற்றுவதற்குரிய கருத்துருவை இணைத்து அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
- பள்ளிகளில் பாடம் நடத்த கூடுதலாக முதுநிலை ஆசிரியர்களும் நியமிக்கப்படும்.
திருப்பூர்:
வரும் கல்வியாண்டில் 164 உயர்நிலை பள்ளிகளை, மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்த, சமக்ர சிக் ஷா திட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட உள்ள164 அரசு உயர்நிலை பள்ளிகளின் விபரங்கள் மாவட்ட வாரியாக அனுப்பப்பட்டுள்ளன.திருப்பூர் மாவட்டத்தில் பிச்சம்பாளையம் புதூர், பாண்டியன் நகர், நெசவாளர் காலனி, முதலிபாளையம், கருவம்பாளையம், காரணம்பேட்டை, பூலுவப்பட்டி ஆகிய பகுதியிலுள்ள 7 உயர்நிலைப்பள்ளிகள் தேர்வாகியுள்ளன.
இந்த பள்ளிகள் அனைத்தையும், மேல்நிலை பள்ளிகளாக மாற்றுவதற்குரிய கருத்துருவை இணைத்து அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.கடந்தாண்டு பிளஸ் -1 மாணவர் சேர்க்கை நடத்தப்பட்ட அரசு பள்ளிகளை விட இந்த ஆண்டில் கூடுதலாக, 7 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இந்த பள்ளிகளில் பாடம் நடத்த கூடுதலாக முதுநிலை ஆசிரியர்களும் நியமிக்கப்படும். மற்ற பள்ளிகளில் உள்ள முதுநிலை ஆசிரியர்கள் நிர்வாக மாறுதல் அடிப்படையில் தரம் உயர்த்தப்படும் மேல்நிலை பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்